சினிமா செய்திகள்
'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணி
"எனக்கு எண்டே கிடையாது" - நடிகர் வடிவேலு வெளியிட்ட வீடியோ
தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருந்த வடிவேலு, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார். இ
மனைவி என்பவள் தெய்வமாகலாம்!
இயக்குனர் ஸ்ரீதரை, யாராலும் மறக்க முடியாது!! திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது... பக்கவாதம் என்ற பயங்கரமான நோய்..! அன்றோடு இயக்குனர் ஸ்ரீதர் படுத
விஜய்க்கு வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார்
வாரிசு படத்தை விஜய் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதை ஏற்கனவே உறுதி செய்து தயாரிப்புக்கு முந்தைய வேலைகளை தொடங்கி உள்ளனர். இது
திருமணம் எப்போது? அம்மு அபிராமி விளக்கம்
சமூக வலைத்தளத்தில் அம்மு அபிராமியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அம்மு அபிராமி கூறும்போத
பார்சிலோனாவுக்கு பறந்த விக்னேஷ் - நயன்தாரா ஜோடி
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளதாக விக்னேஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனுடன் அவர்கள் இரு
வெளிநாடு சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா தற்போது, இந்தியில் ஷாருக்கானுன் ஜவான்,ம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் காட்பாதர் உள்ளிட்ட பல படங்களில்  நடித்து வருகிறார்.ஷங்கரின் உ
20 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதை கடந்த பிப்ரவரி மாதமே உறுதி செய்து முதல் தோற்ற போஸ்டரையும் வெளியி
சிதிலமான பள்ளியை சீரமைத்த கார்த்தி
நடிகர் கார்த்தி சினிமாவை தாண்டி உழவன் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் சிதிலமடைந்த அரசு பள்ளியொன்றையும் சீரமைத்து கொடுத்த
சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார் சூரி
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி மதுரையில் சொந்தமாக ஓட்டல்கள் கட்டி தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் கோவில்கள், அன்ன சத்த
நயன்தாரா திடீரென மருத்துவமனையில் அனுமதி
இயக்குனர் அட்லீ இயக்கும் "ஜவான்" திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட உணவின் ஒவ்வாமை காரணம
அமீர்கான் படத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ரிவ்யூ
ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அமெரிக்க வரலாற்
Ads
 ·   · 636 news
  • R

    3 members
  •  · 4 friends

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கள் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ள திருமுருகண்டி பிள்ளையார் கோவில் சூழலில் அன்றாடம் வாழ்வாதார தொழில் மேற்கொண்டு வாழும் பலரது வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது

நாட்டில் சூழ்ந்துள்ள இன்றைய பொருளாதார நெருக்கடி எல்லோரையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.  ஏராளமான குடும்பங்கள் அடுத்த வேளை உணவிற்கு அல்லற் படும் அவல நிலை தொடர்கின்றது.
ஏ-09 வீதியில் அமைந்துள்ள திருமுருகண்டி பிள்ளையார் கோவில் சூழலில் அன்றாடம் வாழ்வாதார தொழில் மேற்கொண்டு வாழும் பலரது வாழ்வும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏ-09 வீதியுடான போக்குவரத்துக்கள் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.   தற்போது போக்குவரத்து செய்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. இதனால் தமது வாழ்வாதாரம் முற்றாகவே பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


முன்பு களைகட்டி காணப்பட்ட இப் பிரதேசம் இன்று மக்கள் நடமாட்டம் அற்ற  ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. அதாவது    வடக்கிலிருந்து தெற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் பயணிக்கும் பயணிகளில் ஒவ்வொருவரும் முருகண்டி ஆலயத்தை தரிசிக்காது அல்லது அங்கே இளைப்பாறாது சென்றதாக வரலாறுகள் இல்லை.  ஆனால் இன்று  வெறிச்சோடி காணப்படுகின்ற பிரதேசமாக காணப்படுகிறது.  


இதனால் இந்த பிரதேசத்தில் தங்களுடைய வாழ்வாதார தொழிலாக  வியாபாரத்தை மேற் கொண்டு வாழ்ந்து வரும் ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் அவர்களைச் சார்ந்து வாழுகின்ற குடும்பங்களும் தங்களுடைய வருமானங்களை இழந்த நிலையில் காணப்படுகின்றன.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 109
  • More
Attachments
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads