Category:
Created:
Updated:
19 வயதுக்குற்பட்டோருக்கான 30 பேர் கொண்ட தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்ட கிளிநொச்சி புனித சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசி அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று( 16-06-2022) காலை பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கரடிப்போக்கு சந்தியிலிருந்து பாடசாலை முதல்வரால் குறித்த மாணவிக்கு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டு வாகனத்தில் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து செல்லப்பட்டு பாடசாலை மண்டபத்தில் மாணவி கெளரவிக்கப்பட்டார். குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட செயலக உதவிப்பிரதேச செயலாளர், மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பயிற்றுவிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.