Category:
Created:
Updated:
கிளிநொச்சி திருநகர் பகுதியில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள அருள்மிகு கிருஷ்ணர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் முதலாம் நாளாகிய நேற்று (11-06-2022) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நேற்று காலை விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து பகல் 11 மணிக்கு கொடியேற்றம் பெற்றதை அடுத்து சுவாமி உள்வீதி வெளி வீதி உலாவும் நடைபெற்றது.நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் நடைபெறவுள்ள இவ் மகோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 19ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 20ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.