
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் தேவையை கருதி குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் அம்மாச்சி உணவகம் ஒன்றினை அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டு இன்றையதினம் (10-06-2022) கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரால் திறந்து வைக்கப்பட்டது.
இன்று பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு குறித்த அம்மாச்சி உணவகத்தை திறந்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.