Category:
Created:
Updated:
கிளிநொச்சி அக்கராயன்குளம் கமநல சேவை நிலையத்திலிருந்த இரசாசயனப் பசளைதொடர்பில் கமநல சேவை குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்துக்கு அமைவாக உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திலிருந்த 30 அந்தர் யூரியா இரவோடிரவாக களவாடப்பட்ட தொடர்பாக கிளிநொச்சி அக்கராயன் குளம் காலநிலை சேவைகள் குழுவினரால் கடிதம் ஒன்று இன்றைய தினம் (10-06-2022) மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கடிதத்தை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.