Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு செல்வராஜா தலைமையில் குறித்த கலந்துரையாடல் நேரடியாகவும் Zoom தொழில் நுட்பமூடாகவும் இன்று பகல் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக இரசாயன உரம் கிடைக்கப் பெறாமை மற்றும் விவசாய நடவடிக்கைகள் வீட்டுத்தோட்ட செய்கைகள் மற்றும் உணவுற்பத்தி தொடர்பில் தொடர்ந்து அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திலிருந்து யுரியா உரம் எடுக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.