Category:
Created:
Updated:
முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் கல்வியில் சிறந்து விளங்கும், விசுவநாதர் ஆரம்ப பாடசாலை என்றாலே அனைவரது மனங்களிலும் உடனே வருவது தரம் 05. புலமைப்பரீட்சைப்பெறுபேறுகள்தான்இந்த பாடசாலை தனக்கென்றே அசைக்க ஒருபெயரைப்பொறித்துக் கொண்டுள்ளமை அனைவரும் அறிவீர்கள்.
இந்த வகையில் பல மாதங்களாக பாடசாலை முதல்வர் இன்றி இப் பாடசாலையினை இயங்கவிடும்,கோட்டக்கல்விப்பணிமனை மற்றும் வலயக்கல்விப்பணிமனையின் பொறுப்பற்ற நிலையை அடுத்து பெற்றோர், கிராம பிரதேச மக்கள் பல கோணங்களில் விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் இவ் நடவடிக்கை திட்டமிடப்பட்ட சதி முயற்சி எனவும் பேசிவருகின்றனர்.ஓட்டி அல்லாத படகின் நிலையை ஒத்த செயலாக கருதி நேற்றைய தினம் 2022.06.07 முதல்க்கட்டமாக மாணவர்கள் பாடசாலைமுன் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்க்கொண்டுவருகின்றனர்.