Category:
Created:
Updated:
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகை தந்திருந்த யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் திரு.ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள் 19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசியினை பாராட்டி பரிசில் தொகை வழங்கி கெளரவித்திருந்தார்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய அணி குழாமிற்கு தெரிவாகிய மாணவி சதாசிவம் கலையரசி அவர்களுக்கும் அவரை ஊக்கப்படுத்திய பாடசாலை சமூகத்தினர், பெற்றோர்,மாணவியை பயிற்றுவித்தபாடசாலை பயிற்றுவிப்பாளர், மாவட்ட பயிற்றுவிப்பாளர், மாகாண பயிற்றுவிப்பாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினர் அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.