
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளாலி கடற்றொழிலாளர்கள் தமக்கான மண்ணெள்ளையை பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளாலி கடற்றொழிலாளர்கள் தமக்கான மண்ணெள்ளையை பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சிரமங்களை எதிர் கொள்வதாகவும் தமக்கான எரிபொருளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளாலிப் பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
இந்த நிலையில் தற்போது தமக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு 8 தொடக்கம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் தமது தொழில் நடவடிக்கைகளுக்காக தேவையான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஏப்ரல் மாதம் கடற்தொழிலாளர்கள் ஒருவருக்கு50 லிட்டர் மண்ணெண்னையும் மே மாதத்தில் 40 லிட்டர் மண்ணெண்ணெய்யும் மாத்திரம் வழங்கப்பட்டது.
ஆனால் அது போதுமானதாக இல்லை தற்போது எரிபொருள் இல்லாத நிலையில் தொழில் நடவடிக்கைகளை செய்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர் கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர் .
குறிப்பாக பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ள போதும் அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வருகின்ற மண்ணெண்ணெய் பேருந்துகள் மற்றும் டிப்பர் வாகங்களுக்கு வழங்கப்படுகின்றன என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எரிபொருள் பற்றாக் குறை காரணமாக தனி படகுகளில் தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் இப்போது இரண்டு மூன்று தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு படகில் சென்று மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய ஒரு நிலைமை காணப்படுகின்றது சுட்டிக்காட்டியுள்ளனர் .