Category:
Created:
Updated:
கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் இன்று (04-06-2022) இரவு குற்றுயிராய்க் கிடந்த வருவரை அவதானித்த கடை உரிமையாளர் ஒருவர் 19 90 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை எடுத்து குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்லப்பட்ட சமயம் உயிரிழந்துள்ளார்.
இவரது உடலில் போத்தலினால் குற்றப்பட்டு அதிக அளவு இரத்தம் பெருக்கெடுத்து காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.