Category:
Created:
Updated:
முல்லைத்தீவு நகருக்கான பிரதான போக்குவரத்து வீதியாகக் காணப்படுகின்ற ஏ-35 வீதியின் மிக நீளமான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் இதுவரை புனரமைக்கப்படாதநிலையில் காணப்படுகின்றது.அதாவது குறித்த பாலம் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் மற்றும் யுத்தம் என்பவற்றால் சேதமடைந்த நிலையில் தற்காலிக புனரமைப்ப செய்யப்பட்ட நிலையிலேயே இன்று வரை காணப்படுகின்றது.இப்பாலத்தின் பாதுகாப்பு தூண்கள் முழுமையாகவே உடைந்துள்ளதுடன், பாலத்தின் பலஇடங்களில் உடைவுகள் ஏற்பட்டுள்ளன.ஏற்கனவே உடைவுகள்ஏற்பட்ட இடங்களில் தற்காலிக புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், ஏனைய இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு ஆபத்து நிலையில் காணப்படுகின்றது.ஏற்கனவே இப்பாலத்தில் தொடர்ந்தும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு நிகழ்ந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.