Category:
Created:
Updated:
உலகில் முதலாவது தாதிய பெண்மணி நைட்டிங்கேல் அம்மையாருக்கு விளக்கேற்றி மலர் மாலை அணிந்து நினைவு கூர்ந்தனர். அதே வேளை போரின் போது கடமையாற்றி இறந்த வைத்தியசாலையின் தாதியரும் நினைவு கூரப்பட்டார்.தாதியர்கள் விளக்குகளை ஏந்தி சத்தியப்பிரமாணமும் செய்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் உள்ளிட்ட தாதிய சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.கொரோனா காலத்தில் சிறப்பாக செயற்பட்ட தாதியர்களும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.