Category:
Created:
Updated:
முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக வியாழக்கிழமை (12.05.20022) காலை முன்னெடுக்கப்பட்டது.இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 6 நாட்களிற்கு குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.வீதியில் பயணிப்போர் கஞ்சியினை அருந்தி வருகின்றனர்.