
இராமநாதபுரம் பகுதியில் பொலிசார் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டதையடுத்து பொலிசார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடந்தது என்ன?
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பிணி பெண் உட்பட்ட மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிசார் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டதையடுத்து பொலிசார் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில உள்ள பொலிஸ் காவல் நிலையத்திலிருந்து நேற்று (09-05-2022)மாலை முச்சக்கர வண்டியில் சென்ற போலீசார் குறித்த வீட்டில் கசிப்பு இருப்பதாக தெரிவித்து வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை கைது செய்ததால் போலீசாருக்கும் வீட்டிலிருந்தவர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிசார் குறித்த வீட்டிலிருந்த கர்ப்பினிப் பெண் மற்றும் நோய்வாய்ப்பட்ட மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்ட இளைஞரின் தாயார் ஆகியோர் மீதும் பொலிசார் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி பொலிசார் மீதும் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ்உயரதிகார்கள் நிலமைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்த்க்கது.