Category:
Created:
Updated:
கிளிநொச்சி இரணைமடு குளத்தில் 08.05.2022 நேற்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் மீனவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.சடலமாக மீட்கப்பட்டவர் சாந்தபுரம் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின் சடலத்தை மீனவர்கள் மீட்ட நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.