
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு செல்வபுரம் பகுதியில் இறுதியுத்தத்தின் போது தாயினைனயும் பின்னர் தந்தையினையும் இழந்த இரண்டு சிறுமிகள் வசித்து வந்த வீட்டிலிருந்து கிராமஅலுவலர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் த
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராம அலுவலர் பிரிவில் வசித்து வரும் தாய் தந்தையரை இழந்த இரண்டு சிறுமிகள் அவர்களது பேத்தியாருடன் வசித்து வந்த நிலையில் இரண்டு சிறுமிகளும் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து கிராமஅலுவலர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் தாயை இழந்த நிலையில் அவர்களது தந்தை மற்றும் பேத்தியாருடன் வசித்து வந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு அரசினால் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது.
தந்தை கடந்த 2015ம் ஆண்டு இரண்டாவது தாரமாக திருமணம் ஒன்றை செய்து குறித்த வீட்டிலேயே வசித்து வந்த நிலையில் தந்தை நோய்வாய்ப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு சிறுமிகளும் சிறிய தாயினால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வந்ததாவும் பாதிக்கப்பட்ட சிறுமி மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளது தொடர்பில் ஏற்கனவே மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்ற வழக்கொன்று நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் அன்மையில் குறித்த வீட்டிலிருந்து கிராம அலுவலரால் இரண்டு சிறுமிகளும் அவர்களது பேத்தியாரும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பிரதேச செயலாளரிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தீர்வெதுவும் கிடைக்காத நிலையில் வட மாகாண காணி திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ததையடுத்து கடந்த வாரம் மாகான காணித்திணைக்களத்தின் கட்டளைக்கு அமைவாக பிரதேச செயலர் மற்றும் கிராம அலுவலர் காணி உத்தியோகத்தர் ஆகியோரால் செல்வபுரம் பொது நோக்கு மண்டபத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட போதும் வீட்டை குறித்த சிறுமிகளுக்கு வழங்க முடியாது என்றும் குறித்த வீட்டிலிருந்து வெளியேற தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிராம அலுவலர் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் சிலரும் இதில் உடந்தையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளடன் குறித்த வீட்டடில் வசிக்கும் சிறிய தாய்க்கு கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகாவில் கிராம அலுவலர் பிரில் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் செலவில் அரச வீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளதுடன் இவ்வாறு இரண்டு வீடுகளையும் கையப்படுத்தும் நோக்கில் இரு சிறுமிகளையும் பிரதேச செயலக அதிகாரிகளின் துணையுடன் வெளியேற்றியுள்ளமை தொடர்பில் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.