
கிளிநொச்சியில் தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரிம் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டு மே தின பேரணி சற்று முன்னர் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது
சர்வதேச மே நாளாகிய இன்று (01-05-2022) கிளிநொச்சியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தமிழ்த் தேசிய கூட்டு மே தின பேரணி இன்று பி.ப. 2.00 மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமாகியது.தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரியும் . வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தியும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் தமிழர் தாயகப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் நீண்டகாலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தொழிலாளர்களின் உரிமைக்களுக்காகவும் .
குறிப்பாக நாட்டு மக்களை வாட்டும் அதிகரித்த விலைவாசிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பேரணிநகர்ந்து சென்றதுடன் தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்களையும் அடக்கு முறைகளையும் சித்தரிக்கும் வகையிலான ஊர்திகளும் பவணியாக கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தை சென்றடைந்தன.
சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் செல்வம் அடைக்கலநாதன் சாள்ஸ் நிர்மலநாதன் எம் ஏ சுமந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சரவணபவன் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.