
கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம். மேற்கு அ.த.க பாடசாலையில் கடந்த 1989 முதல் 1999 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அதிபராக பணியாற்றிய மகேந்திரா அவர்களின் ஞாபகார்த்த நினைவு நிகழ்வும் பொற்கால மலர் வெளியீட்டு விழாவும் சிறப்பாக பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றுள்ள
கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் முத்தமிழ் கலையரங்க மண்டபத்தில் பாடசாலை அதிபர் மதிப்புக்குரிய சுதாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கை வெளிநாட்டு சேவை வெளிநாட்டு அமைச்சு பணிப்பாளர் திரு அகஸ்டின் கிரிஸ்ரிரூபன் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமச்சர் குருகுலராஜா மறைந்த அதிபர் கனகராஜா மகேந்திரராஜா அவர்களது துணைவியார் பிள்ளைகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.நிகழ்வின் முன்னதாக பிரதம விருந்தினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாடசாலை முன்றலில் இருந்து மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு விழா மண்டபத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அதிபர் கனக மகேந்திரா அவர்களின் துணைவியார் அவரது திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின தொடர்ந்து நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் கருத்துரைகள் என்பனவும் இடம்பெற்றுள்ளன.