வைத்தியர் ஒருவர் காலை உயர்த்தி வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு மக்கள் அச்சமடையத் தேவையில்லை
கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு மக்கள் அச்சமடையத் தேவையில்லையென்றும் குறித்த பிரதேசத்தில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களை வெளியேற்றும் ஒரு செயற்பாடாகவே அன்மையில் பரப்பபட்ட செய்தி அமைந்துள்ளதாகவும் அக்கராயன் பிரதேச பொது அமைப்புக்களும் பிரதேச மக்களும் குறிப்பிட்டுள்ளனர்.அண்மையில் கிளிநொச்சி அக்கராயன் வைத்தியசாலையில் கடமையிலிருந்த வைத்தியர் ஒருவர் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை மேற்கொண்ட சமயம் அவருடைய காலை உயர்த்தி வைத்திருந்த சம்பவம் தொடர்பில் விஷமத்தனமான கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தன.
இந்த நிலையில் குறித்த பிரதேச வைத்தியசாலையின் கடமையிலிருந்த குறித்த வைத்தியர் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த ஒரு நோய்வாய்ப்பட்ட வைத்தியர் என்றும் அவர் மக்களுக்கு கால நேரம் பாராது முழுமையான சேவையை வழங்கும் வகையிலேயே குறித்த வைத்தியசாலையில் இதுவரை காலமும் செயல்பட்டு வந்ததாகவும் அந்த தினம் அவருடைய காலில் ஏற்பட்ட வலி காரணமாகவே வைத்தியர் அவ்வாறு இருந்ததாகவும் அதனை திட்டமிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத்துறைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையிலும் அக்கராயன் வைத்தியசாலையில் வைத்தியர்களை கடமையாற்ற விடாது அவர்களை வெளியேற்றுவதற்கு செய்யப்படுகின்ற ஒரு திட்டமிட்ட குழுவின் செயற்பாடு என்றும் இதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் அக்கராயன் பிரதேச மக்கள் அமைப்புகளும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த பிரதேசத்தில் அதிகளவான மக்கள் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இன்றி வைத்தியர்கள் சேவைகளை வழங்கி வருகின்றனர் எனவும் பிரதேச மக்கள் பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன குறிப்பிடத்தக்கது.