
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழான தற்போதைய நீரின் அளவைக் கொண்டு இருபதாயிர்து 22 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு போக நெற்செய்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது
மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களில் அண்மைய நாட்களாக பெய்யும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுகிறது.இரணைமடு குளத்தின் நீர்மட்டம் நிறைவு மட்டத்தை எட்டிய நிலையில் குளத்தின் சிறுபோக நெற்செய்கை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற பயிர்செய்கை கூட்டத்தின்போது பதினாறாயிரத்து 211 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு அதற்கான கூட்டங்களும் நடத்தப்பட்டன.இந்த நிலையில் குளத்தின் நீர்மட்டம் தற்போது அதிகரித்ததை அடுத்து குளத்தின் நீர் விநியோக பரப்பிற்குட்பட்ட இருபதாயிரத்து 22 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதவது இரணைமடு நீர்ப்பாசனத் பிரதேச எல்லைக்கு அருகிலுள்ள நீர்ப்பாசனம் செய்யக்கூடிய நீண்டகாலமாக சிறு போக செய்கைக்கு உரிமை கோரப்படும் 985 ஏக்கர் காணி செய்கைக்காக மேலும் இத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.