Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர சிறுகுளங்களின் கீழ் தீர்மாணிக்கப்பட்ட சிறு போக நெற்செய்கையில் இது வரை 29 வீதமான நிலப்பரப்பில் பயிர்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு முள்ளியவளை, குமுழமுனை, கொக்குத்தொடுவாய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, ஒலுமடு, பாண்டியன்குளம், துணுக்காய், உடையார்கட்டு ஆகிய கமநல அபிவிருத்தி நிலையங்களுக்குட்பட்ட வயல் நிலங்களில் இவ்வாண்டு மொத்தமாக 4442.70 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டது.அதனடிப்படையில் தற்போது 2665.30 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 1777.40 ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.