தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதுப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 5 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 286 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 17,997 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 6 கோடியே 48 லட்சத்து 41 ஆயிரத்து 401 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.