Ads
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன - தமிழக அரசு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணை பெற்ற 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வாதத்தின்போது, தமிழக அரசு சார்பில் தகவல் பதிவு செய்யப்பட்டது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலை குறித்த கோப்புகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி அன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
Info
Ads
Latest News
Ads