
அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்
தமிழ்த் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் அலுவலகமான அறிவகத்தில் நேற்று நடைபெற்றது.நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நினைவுச் சுடரினையும் ஏற்றி அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலையினையும் அணிவித்தார்.இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும்’- என்று கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில் அன்னைபூபதி அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி காலை 10-45மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் உள்ள குருந்த மரநிழலின் கீழ்அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்குத் தனது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி அவர்களின் இறுதி மூச்சு காற்றோடு ஏப்பிரல் மாதம் 19ம் திகதி காலை 8-45 மணியளவில் கலந்து பரவியது.