Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பாலைமரத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் நேற்று (11) காலை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.முன்னதாக ஆலயத்திலேயே இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து எழுந்தருளிய அம்பாள் உள்வீதி வலம் வந்து தேரில் ஏறி வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலித்தார்.இதன்போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி, பாற்செம்பு, கற்பூரச்சட்டி, அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதையும் காணக்கூடியதாக இருந்தது.