
இரணைமடு குளத்தின் நீர் பங்கு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிப்பு விவசாயிகளின் கோரிக்கை நியாயமானதா என்பது தொடர்பில் கலந்துரையாட இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர்
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள பயிர் செய்கையின் போது தங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தங்களுக்குரிய நீர் பங்கு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து குறிப்பிட்ட சில விவசாயிகள் இன்றைய(07-04-2022) தினம் கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர் இதனை அடுத்து கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் மாவட்டத்தில் சிறுபோக பயிர்செய்கை கூட்டமானது துறை அதிகாரிகளின் ஆலோசனைகளின் படியும் எங்களது அறிவுறுத்தல்களின் படியும் விவசாயிகளின் ஒத்துழைப்போடும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மேற்கொள்ளப்படுகின்றன.அதேபோல பயிர் செய்கை சம்பந்தமான தீர்மானங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தது இதில் அதிருப்திஅடைந்தவர்களின் விடயங்கள் பெரிய அளவில் பிரஸ்தாபிக்காத காரணத்தினால் இன்றைய தினம் அவர்கள் கூடி வந்திருக்கின்றார்கள் இவர்களது கோரிக்கை நியாயமானது தானா என்பது தொடர்பில் கலந்துரையாட வேண்டியுள்ளதால் மீளவும் கூட்டத்தை கூட்டிஆராய வேண்டியுள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.