
சேதனப் பசளையைினை முழுமையாக பயன்படுத்தி சிறுபோக பயிற்செய்கையினை மேற்கொண்டு அதிஉச்ச பயனைப் பெறும் வகையில் மாவட்ட அளவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் கீழ் இவ்வாண்டு இருபத்திஐயாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பிலான பயிர் செய்கை குழுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.மாவட்டத்தின் பயிர் செய்கை நடவடிக்கைகள் தொடர்பில் அரச அதிபர் கருத்து தெரிவிக்கும் போதுகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் சிறு போக பயிர்ச்செய்கைக்கான கலந்துரையாடல்கள் அந்தந்த குளங்களின் கீழான விவசாய அமைப்புகளுடன் நடைபெற்று வருகின்றன.வடமாகாணத்தின் பாரியகுளமான இரணைமடு நீர்ப்பாசனகுளத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை தொடர்பான கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளதுடன் இரணைமடு குளத்தின் கீழாக 15750 ஏக்கரில் சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 25000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.இவ்வாண்டு சிறுபோக பயிற்செய்கையானது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக சேதனப் உரத்தை பயன்படுத்தியே மேற்கொள்ளப்படவுள்ளது.அதற்கான சேதனப் பசளைகளை வழங்கும் நடவடிக்கைகளை கமநல அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்டுள்ளது.இதே வேளை பயிர்செய்கை நடவடிக்கைகள் பாதிக்காத வகையில் விவசாயிகளுக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளனஎனவே விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்டதான அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படும் அதேவேளை சேதனப் பசளை ஊடாக சிறுபோக பயிற்செய்கையினை மேற்கொண்டு அதிஉச்ச பயனைப் பெறும் வகையில் மாவட்ட அளவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.