
கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மற்றும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான மதிப்பளப்பு நிகழ்வு இன்று (05-04-2022)நடைபெற்றுள்ளது
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் கண்டாவளை கல்வி கோட்டத்துக்கு உட்பட்ட முதல்நிலை பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மற்றும் சித்திபெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று பகல் 10 மணிக்கு நடைபற்றுள்ளதுபாடசாலை முதல்வர் க.கருணானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு க.அ. சிவனருள் ராஜா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கிமதிப்பளித்துள்ளார் குறித்த நிகழ்வில் கண்டாவளை கோட்டக்கல்வி அதிகாரி ஆ. உதயணன் ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் பொ. விஜயநாதன் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.