Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்ன பல்லவராயன்கட்டு கிராம அலுவலர் பிரிவில் நீண்டகாலமாக குடியிருக்கும் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் இதுவரை வழங்கப்படாமல் இருப்பதாகவும் குறித்த காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்களை பெற்று தருமாறு கோரியுள்ளனர்.எனவே குறித்த காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுகிளிநொச்சி சின்ன பல்லவராயன்கட்டு காணிகள் தொடர்பில் காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்திற்கு இது தொடர்பில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதற்கான பதில் கிடைக்கப் பெற்றதும் குறித்த காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என புனகரி பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது