
சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான சேதன உரம் மொனராகல மாவட்டத்திலிருந்து 600 பாரஊர்திகளில் எடுத்து வரப்படவுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான சேதன உரம் மொனராகல மாவட்டத்திலிருந்து 600 பாரஊர்திகளில் எடுத்து வரப்படவுள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நிலப்பண்படுத்தலுக்கு தேவையான எரிபொருள் பெற்றுக் கொள்வதில் கால தாமத நிலை காணப்படுகின்றதுஇதனால் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் இந்த நிலையில் சேதன உரத்தைப் பயன்படுத்தி பயிர் செய்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில் மொனராகல மாவட்டத்திலிருந்து 600 பாரஊர்திகளில் சேதன உரம் எடுத்து வரப்பட உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சேதன உரத்தை ஏற்றி வரும் 600 லொறிகளுக்கும் தலா250 லிட்டர் டீசல் வீதம் எரிபொருள் வழங்க வேண்டிய தேவை இருப்பதாகவும் மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது மொனராகல மாவட்டத்திலிருந்து 600 பாரஊர்திகளில் எடுத்து வரப்படவுள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நிலப்பண்படுத்தலுக்கு தேவையான எரிபொருள் பெற்றுக் கொள்வதில் கால தாமத நிலை காணப்படுகின்றதுஇதனால் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் இந்த நிலையில் சேதன உரத்தைப் பயன்படுத்தி பயிர் செய்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில் மொனராகல மாவட்டத்திலிருந்து 600 பாரஊர்திகளில் சேதன உரம் எடுத்து வரப்பட உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சேதன உரத்தை ஏற்றி வரும் 600 லொறிகளுக்கும் தலா250 லிட்டர் டீசல் வீதம் எரிபொருள் வழங்க வேண்டிய தேவை இருப்பதாகவும் மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது