
கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டிப்பர் வாகன சாரதிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கியதால் அமைதியின்மை
கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (03-04-2022) டிப்பர் வாகன சாரதிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கியதால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுகிளிநொச்சி நகரத்தின் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடர்ச்சியாக கொண்டுவரப்படுகின்ற டீசல் மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்கள் குறிப்பிட்ட சில டிப்பர் வாகனங்களுக்கு மாத்திரமே பெருந்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றன.விவசாயிகள் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை கனப்படுகின்றன.நேற்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பித்து இருக்கின்ற நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பங்கீட்டு அட்டைக்கான மண்ணென்ணையை வழங்காது நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகன சாரதிகளுக்கு மண்ணெண்ணெய் வினியோகம் மேற்கொள்ளப்பட்டது.இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்களுக்கு உடனடி தேவை களுக்காக பங்கீட்டு அடிப்படையில் மண்ணென்ணை விநியோகிக்கும் படி அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவ்வாறு எரி பொருளை வழங்காது டிப்பர் வாகன சாரதிகளுக்கு பெரும் தொகையில் எரிபொருளை வழங்கி வருவதால் அங்கு அமைதி இன்மை ஏற்பட்டது.கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற அதேநேரம் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு அதிக அளவில் மண்ணென்ணை டீசல் என்பன வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.