Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணை, துணுக்காய் பிரதேசசபை ,துணுக்காய் பிரதேச செயலகம் மற்றும் மல்லாவி பொலிஸார் இணைந்து இன்றைய தினம் 30.03.2022 டெங்கு ஒழிப்பு கள வேலைத்திட்டம் மல்லாவி நகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் நுளம்பு பெருகக்கூடிய சூழலை வைத்திருந்தவர்கள் அடையாளங்காணப்பட்டு எச்சரிக்கப்பட்டதுடன் சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதே வேளை மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த வருடம் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.