
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட முழங்காவில் சென்சபஸ்ரியார் இறங்கு துறையை புனரமைத்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில்உள்ள மீன்பிடி இறங்கு துறைகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன இதனால் தாங்கள் தொடர்ந்தும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக கடற்றொழில் உபகரணங்களை தொழிலுக்கு கொண்டு செல்வதற்கும் மீன்பிடிப்படகுகளை துறைகளில் வைத்து பாதுகாப்பதற்கும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இறங்கு துறைகளை புனரமைத்து தருமாறு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது இறங்கு துறைகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கிளிநொச்சி முழங்காவில் சென் செபஸ்தியார் இறங்கு துறையானது இதுவரை புனரமைக்கப்பட்ட மையினால் இப் பகுதி கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்குறிப்பாக கடல் வற்றுக் காலங்களில் கடற்றொழில் உபகரணங்களை நீண்ட துாரம் காவிச் சென்று தொழிலுக்கு செல்வதும் பின்னர் கடற்றொழில் உபகரணங்களை கரை சேர்ப்பதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.