Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான வன்னேரிக்குளத்தின் கீழுள்ள விவசாய வீதிகள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.இவ்வாறு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் தொடர் மழை காரணமாக புனரமைப்பு பணிகளில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.இந்த நிலையில் குறித்த விதிகளை புனரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மேற்படி குளத்தின் கீழுள்ள ஒன்பது கிலோ மீட்டர் வரையான விவசாய வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.