
காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்படுதல் விவசாயச் செய்கை கொள்வதற்கான சொந்தக் காணிகள் இல்லாத நிலையில் பொது மக்கள்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 3200 க்கும் மேற்பட்டோர் விவசாய செய்கை மேற்கொள்வதற்கான சொந்த காணிகள் இல்லாத நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்படுதல் மற்றும் அரச அதிகாரிகளின் துணையுடன் காடுகளை அழித்து பெருமளவான காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சுமார் 3200 ககும் மேற்பட்டோர் விவசாயச் செய்கை மேற் கொள்வதற்கான சொந்தக் காணிகள் இல்லாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்குறிப்பாக குறித்த பிரதேசம் மிக பின்தங்கிய பிரதேசமாக காணப்படுவதனால் தொழில் வாய்ப்புக்கள் அற்ற நிலையிலேயே ஏராளமான இளைஞர்கள் யுவதிகள் காணப்படுகின்றனர்அத்துடன் கடந்த 1962 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடியேற்றத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வயல் காணிகளில் குறிப்பிட்டவர்கள் மாத்திரம் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் ஏனைய 3200இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பயிர் செய்கை காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.குறித்த பிரதேசத்தில் ஏராளமான கைவிடப்பட்ட குளங்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் காணப்படுகின்ற போதும் அதனை வழங்குவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லையென்றும் மாறாக குறித்த பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்தினால் ஒதுக்கு வனப் பிரதேசங்கள் என்ற அடிப்படையில் கடந்த சில கடந்த சில நாட்களாக எல்லையிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனஅத்துடன் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் அரச காணிகள் அதிகாரிகளின் துணையுடன் வெளியாட்களாலும் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களாலும் துப்பரவு செய்யப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன இவ்வாறு வசதி படைத்தவர்கள் காணிகளை ஆக்கிரமித்து வருகின்ற போதும் இந்த பிரதேசத்திலேயே காணிகளின்றி தொடர்ந்து பாதிக்கப்பட்ட தமக்கான காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதையும் இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார் குறிப்பிடத்தக்கது.