Category:
Created:
Updated:
குறித்த நிகழ்வு விடியல் ஆடை தொழிற்சாலையினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது.புவி மணித்தியாளமான 08.30 - 9.30 மணிவரையான காலப்பகுதியில் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு புவிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்வில் சர்வமத தலைவர்கள், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.இதன் போது பத்தாயிரம் சிட்டி விளக்குகள் ஏற்றப்பட்டு அப்பகுதி அழகாக காட்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.