
கடற்றொழிலை நம்பி வாழ்ந்த பெண்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன் பண்ணைகளுக்கான அட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் தலைவர் தெரிவிப்பு
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அட்டை வளர்ப்பு தொழில் காரணமாக கடற்றொழிலை நம்பி வாழ்ந்த பெண்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன் பண்ணைகளுக்கான அட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் புநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தலைவர் பிரான்சிஸ் ஜோசப் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அட்டை தொழில் வழிமுறைகளால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்களால் சுட்டிக் காட்டப்பட்டு வருகின்றது.அத்துடன் பெரும் முதலீடுகளைச் செய்து அட்டை பண்ணைகளை அமைத்துள்ள போதும் அவற்றிற்கு தேவையான அட்டை குஞசுகளை பெற்றுக் கொள்வதில் தொடர்ந்தும் சிரமங்கள் காணப்படுவதாகவும் வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்ற அட்டை குஞ்சுகள் இந்த சூழலுக்கு ஏற்றதாக இல்லையென்றும் அவை அழிவடைந்து விடுகின்றன என்றும் கடற்தொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தலைவர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அட்டை வளர்ப்பு தொழல் மிகவும் வருமானந் தரக்கூடிய ஒரு தொழில் முறையாகும் இதனை முன்னெடுக்கும் போது ஏனைய தொழில்கள் பாதிப்படையக் கூடாது.என்பதுடன் இன்றை சூழலில் அட்டைக்குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் கானப்டுகினன்றன.2018 ஆம் ஆண்டுஅட்டைக்குஞ்சு உற்பத்திக்கு பூநகரி வெட்டுகாடு பகுதியில் அட்டை குஞ்சு உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்து குஞ்சுகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையிலே அதற்கான காணியை கோரிய போது அப்போதைய முதலமைச்சர் காணியை தர மறுத்ததால் பாரிய திட்டம் கைவிடப்பட்டுள்ளதுகுறிப்பாக உதவித் திட்டங்களை வழங்கியிருந்தாலும் மேலதிகமாக தங்களுடைய முதலீடுகளைச் செய்து பண்ணைகளை அமைத்திருந்தாலும் அவற்றுக்கான அட்டைகளை பெற்றுக் கொள்வதில் பண்ணையாளர்கள பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.பெருமளவான வருமானத்தை ஈட்டக்கூடிய அட்டைப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதற்கான அட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன அதாவது இந்த பிரதேசத்திலேயே இயற்கையாக உற்பத்தியாகும் குஞ்சுகளை அந்த அட்டை பண்ணைகளுக்கு விடுவதன் மூலம் உரிய இலக்கினை எட்ட முடியும் ஆனால் வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்ற குஞ்சுகள் மூலம் எந்தவிதமான நன்மையும் கிடைப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.குறிப்பாக வலைப்பாடு இரணைமாதா நகர் பூநகரி வெட்டுகாடு போன்ற கடற்பகுதிகளில் இயற்கையாகவே உற்பத்தியாகும் அட்டைக் குஞ்சுகளை அப்பகுதிகளில் இருக்கின்ற பெண்கள் தினமும் கேரிகரித்து அதன் மூலம் வருமானத்தை பெற்று வந்தனர் ஆனால் இப்பொழுது இந்தப் பகுததிகளில் பண்ணைகளை அமைத்துள்ளமையால் அவர்களது தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அட்டைகள் வளர்ப்புக்காக சிலாபம் மற்றும் புத்தளம் அதேபோல அரியாலையில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் அட்டை பண்ணைகளிலிருந்து குஞ்சுகளை பெற்று இங்கே உள்ள அட்டை பண்ணைகளில் விடுகின்ற போது அந்த குஞ்சுகள் அழிந்துவிடுகின்றன.ஆகவே இந்த கடல் பிரதேசத்தில்உற்பத்தியாகும் குஞ்சுகளை இந்த பிரதேசத்தில் வளர்க்கக் கூடியதாக இருக்கும் என்பதாகுமஅட்டைப் பண்ணைகளால் தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வழியைக்கடற்றொழில் அமைச்சர் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்ட அவர்குறிப்பாக இரவு வேளைகளில் வெளிச்சம் பாவித்து அட்டை பிடிப்பது என்பது இலங்கை அரசாங்கத்தினால் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தாலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களால் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடிக்கப்படுகிறது அதாவது சிலிண்டர் பாவித்து பரவை கடல் அட்டை பிடிக்கும் தொழிலை செய்ய முடியாது.அவ்வாறு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை கடற்படையினர் தடுத்து வருகின்றனர் சட்டவிரோத கடல் தொழிலில் ஈடுபடுவோர் கடல் அட்டைகளை மட்டும் பிடிக்கவில்லைஏனைய வளங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.எனவே இரவு அட்டை தொழில் என்பது தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.