
நேற்று இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கிளிநொச்சி இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07ம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இரணைதீவு கடல் பகுதியில் நேற்று (24-03-2022)அதிகாலை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படனர்.நேற்று (24-03-2022) பிற்பகல் 4.28 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார முன்னிலையில் நீதவான் அறையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த 12 பேரையும் எதிர்வரும் 07ம்ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.