Category:
Created:
Updated:
கடல் உணவுகளை ஏற்றுவதற்காக விசுவமடுவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் சாரதியின் கவனக்குறைவால் நித்திரை தூக்கம் காரணமாக வாகனம் வீதியை விட்டுவிலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த சாரதி படுகாயம் அடைந்த நிலையில், வீதியால் பயணித்த அவர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து முல்லைத்தீவு வீதி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.