யாழ் மாவட்டம் அபாய வலயமாக அறிவிப்பு
இலங்கையில் தீவிரமான டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்ப்பாணமும் அடங்கியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்தது,
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் தற்போதைய காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் மலோரியா அபாயம் இருந்தபோதும் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்றார்.
மேலும், இலங்கையில் 6 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் யாழ்ப்பாணமும் அடங்கியுள்ளதாக மாவட்டச் செயலர் கூறியுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.