ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேறியது
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை மீதான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், தீர்மானத்துக்கு எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.
இந்தியா, ஜப்பான் உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல என்றும் இலங்கையில் அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்காகும் என்றும் பிரிட்டனின் பிரதிநிதி ஐநாவில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான தீர்மானம் அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கும் சவாலாக அமைந்துள்ளதாக தீர்மானம் மீதான விவாதத்தில் இலங்கையின் பிரதிநிதி தெரிவித்துள்ளதோடு, குறித்த தீர்மானம் ஐநாவின் அடிப்படை உடன்படிக்கைகளுக்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை நிலைமைகளை ஐநா அரசியல் மயப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சீனா, இலங்கை மீதான தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை மீதான ஐநா தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்து, பிலிப்பைன்ஸ் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளது.