கிளிநொச்சி நகர் பகுதியில் இரு பெண்பிள்ளைகளின் உதவியுடன் கடத்திச் செல்லப்பட்ட 15 வயதுடைய சிறுமி மாத்தளை பகுதியிலிருந்து மீட்பு.
கிளிநொச்சி நகர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியொரவரை கடந்த் 17ஆம் திகதியில் காணாமல்போயிருந்ததாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுப்பதில் அசமந்தப் போக்கு காட்டி வருவதாகவும் குறித்த சிறுமியின் பெற்றோரால் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுமி நேற்றையதினம் அவரது பெற்றோர்களால் மாத்தளை செலகம என்ற இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியை கிளிநொச்சி நகரத்தில் இருந்து ஒரு முஸ்லிம் நபர் ஒருவர் இரு பெண்பிள்ளைகளின் உதவியுடன் கடத்திச் சென்றதாகவும் மாத்தளை பகுதியிலிருந்து சிறுமி தப்பியோடி அவர்களது பெற்றோரின் தொலைபேசிக்கு; தொடர்பு கொண்ட நிலையில் குறித்த சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு பெற்றோரால் கிளிநொச்சிக்கு இன்றைய தினம் காலை தொடரப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன் இன்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்திய சாலையில் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.