சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க அரசாங்கம் தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த புதிய விதிமுறைகள் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பிலும் சேர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தங்கள் இராணுவத்தை பாதுகாக்க மற்ற நாடுகள் சட்டங்களை வகுத்துள்ளன என்றும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
அதன்படி கொண்டுவரப்படும் புதிய சட்டதிட்டங்களின் படி இராணுவத்தினர் மீது வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது அவர்களை தண்டிக்கவோ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கை தொடர்பான முடிவைப் பொருட்படுத்தாமல் தொடர்புடைய சட்டங்கள் அரசியலமைப்பில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.