பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் கட்சியிலிருந்து நீக்கம்
அரசாங்கத்தின் இருபதாவது அரசியல் சீர்த்திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசியரியருமான சங்கரன் விஜயசந்திரன் தெரித்தார்.
இன்று (மார்ச், 20) மலையக மக்கள் முன்னணியின் ஹட்டன் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத்தின் இருபதாவுது சீர்த்தம் என்பது நாட்டின் அபிவிருத்திக்காக கொண்டு வரப்பட்டதல்ல அது சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கும் பாதிக்கும் வகையில் அமைந்திருந்ததனால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி அதனை எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் அதனை எமது கட்சியினை அரவிந்த குமார் அவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார் அதனை தொடர்ந்து தற்காலிகமாக அவரை இடைநிறுத்தியிருந்தது கடந்த 19 திகதி ஹட்டன் பிரதான அலுவலகத்தில் கூடிய மத்திய குழுவின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுக்கமைய அவரை மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி, மகளிர் முன்னணி அரசியல் தலைவர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என்றும் முடிவு செய்ததனால் அவரை நீக்கியுள்ளோம்.
அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களித்தது கட்சியின் ஒருமைப்பாட்டினையும் ஒழுக்கத்தினையும் மீறிய செயலாக இது கணிக்கப்படுகிறது அத்துடன் இன்று அரசாங்கத்திற்கு எதிராக கூட்டணியில் நின்று பதுளையில் வாக்கு கேட்டதன் காரணமாகத்ததான் அவர் வெற்றிபெறக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் அவர் வாக்களித்த மக்களுக்கும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளார் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் தான் போட்டியிட உள்ளது ஆகவே இவரை நீக்கியதன் காரணமாக மலையக மக்கள் முன்னணிக்கு பாரிய பாதிப்பு எதனையும் ஏற்படுத்தாது எனவும் கட்சி எப்போது ஜனாநாயக வழியினையும் ஒழுக்கத்தனையும் கட்சியின் சட்டத்திட்டங்களையும் முன்னிலைப்படுத்தியே முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.