மே 2ம் தேதி தெரியும் எழுச்சி மிகுந்த கட்சி எதுவென்று? - பிரேமலதா விஜயகாந்த்
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ், அமமுக அமைப்பு செயலாளர் பாலமுருகன் ஆகியோர் சென்றிருந்தனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா கூறுகையில், கிராமங்கள் வரை கிளை கழகங்கள் அமைந்துள்ள கட்சி தேமுதிக, 243 தொகுதிகள் கொண்டு தேமுதிக பலமாகவுள்ளது என்று கூறினார். மேலும் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற கூடாது. கல்வி மற்றும் மருத்துவங்களை இலவசமாக தர வேண்டும் என்றும், 60 தொகுதிகளில் பிரசாரம் கிடையாது என்றும், சில தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார் .
அப்போது செய்தியாளர் ஒருவர் உங்கள் பிரசாரத்தில் கூட்டம் அதிகம் கூட்டம் கூடவில்லையே தேமுதிகவுக்கு எழுச்சி இல்லையா என்று கேளவி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரேமலதா கொரோனா காலகட்டம் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கிறது. மே 2ம் தேதி ரிசல்ட் வரும் அப்போது அனைவரும் பார்ப்பீர்கள் என்று சவால் விடுப்பது போல கூறினார்.