பூநகரி கௌதாரி முனையில் இளைஞர் ஒருவர் கொலை சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட நான்கு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது-
கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றிருந்த இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.இக் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நால்வர் நேற்றைய தினம் பூநகரி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒரு பெண் உட்பட நான்கு பேரும் இன்றைய தினம் (28-12-2021) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்று பதில் நீதவான் திரு எஸ் சிவ பாலசுப்பிரமணியம் முன் நிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அடுத்து குறித்த 4 பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த மாறும் உத்தரவிடப்பட்டுள்ளது-