Ads
ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளது - கனடா பிரதமர்
கடந்த ஆண்டில், ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆசிய பெண்களைக் குறிவைத்து அட்லாண்டாவில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
‘இந்த அறியாமை, வன்முறை மற்றும் பாரபட்சமான நடத்தைக்கு கனடாவில் அல்லது உலகில் எங்கும் இடமில்லை. அதற்கு எதிராக நாம் தொடர்ந்து ஒற்றுமையாக நிற்க வேண்டும்’ என பிரதமர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மேரி என்.ஜி.யின் டுவீட்டை பிரதமர் பகிர்ந்துள்ளார். அதில் மேரி, இப்போது, ஆசிய கனடியர்களுக்கு அவசரமாக உங்கள் உதவி தேவை. கொவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான தடுப்பூசிகள் எங்களிடம் உள்ளன. ஆனால், இனவெறியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தடுப்பூசி எங்களிடம் இல்லை’ என்று பதிவிட்டிருந்தார்.
Info
Ads
Latest News
Ads