Category:
Created:
Updated:
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தையும் தயாரிக்க இருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்க இருக்கிறார். இவர் இதற்குமுன் சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்திற்கான வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.