Category:
Created:
Updated:
யாழ்ப்பணம் மாவட்ட செயலகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காணி தொடர்பான ஆவணங்களை நாளை மீண்டும் மாவட்ட செயலகத்திற்கு கொண்டுவருமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை விடுத்துள்ளார்
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட வாழ்வாதர குழுவின் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டத்தொடர், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் மஹிந்தானந்த, காணி விவகார அமைச்சர் எஸ். எம் சந்திரசேன மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் ஆகியோருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் இந்த பணிப்புரையை விடுத்தார்.
எதிர்வரும் காலங்களில், காணி ஆவணங்களை அனுராதபுர அலுவலகத்திற்கு கொண்டு செல்வதை உடனடியாக நிறுத்துமாறும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.