புடவையில் கவர்ச்சிக் காட்டும் காஜல் அகர்வால்
இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகப்படுத்தியவர்கள் யாருமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது; மனோஜ் பாரதிராஜாவை தவிர. ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரியாசென், பிரியாமணி என்னும் வரிசையில் காஜல் அகர்வாலை பொம்மலாட்டம் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாரதிராஜா.
பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.
இந்தியன் 2 படத்திற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது துல்கர் சல்மானுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் "ஹே சினாமிகா" என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
டிரான்ஸ்பரன்ட் புடவை ஒன்றை அணிந்து பயங்கர கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஒரு புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.